கதிர்காம ஆலய நன்கொடைகளை பிரித்துக் கொள்வதில் அடிதடி : ஒருவர் வைத்தியசாலையில் : பாதுகாப்புக்கு வந்த இராணுவம்
கதிர்காமம் எசல உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கோவிலின் இரண்டு பாரம்பரிய கப்புறால தலைமுறையினரிடையே மோதல் ஏற்பட்டு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி மாலை கோவிலுக்கு வந்த ரத்நாயக்க கப்புறால குலத்தைச் சேர்ந்த ஒருவரை இம்மாத கப்புறால பொறுப்பாளர் கயான் ராஜபக்ச தாக்கியுள்ளார்.
உபுல் ரத்நாயக்க தம்மை தாக்கியதாக கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகராறு குடும்பங்களுக்கு இடையே பிரச்னையாக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது ருஹுனு மகா கதிர்காம விகாரையில் 03 கப்புறால தலைமுறையினர் கதிர்காம ஆலய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
ரத்நாயக்க குடும்பம், ராஜபக்ஷ குடும்பம், முனசிங்க குடும்பம் எனும் 3 பிரிவினர் சேவையாற்றுவதுடன், கடந்த காலங்களில் அதிகாரம எனும் கப்புறால குடும்பம் கதிர்காம ஆலயத்தில் சேவையாற்றியுள்ளது.
இவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் கோவிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஆலய பெரகர நேர பாதுகாப்பிற்காக இராணுவமும் அழைக்கப்பட்டுள்ளனர்.