உலக இருதய தினத்தினை முன்னிட்டு காரைதீவு மருத்துவ முகாம்

உலக இருதய தினத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்
உலக இருதய தினத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (02) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சிவசுப்பிரமணியம் ஜீவராணி மற்றும் சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் ஆகியோரினால் தொற்றா நோய் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டல் மேற்கொள்ளப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கான இரத்தப்பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் என்பன மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
Sathasivam Nirojan