கிராம சேவகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க சாகல உறுதி.

கிராம சேவகர்களின், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமை அதிகாரிகளின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க உறுதியளித்ததாக ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் நந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.