இம்முறை பிள்ளையானையோ , கருணாவையோ பயன்படுத்தி NPPயின் வெற்றியை ரணிலால் தடுக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ.
பிள்ளையானையோ, கருணா அம்மானையோ பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் முன்னேற்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தடுக்க முடியாது என்பதை ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகளுக்கு பயந்துள்ள சிலர் புலம்பலாம் எனவும், ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் கொலை போன்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில் சட்டமா அதிபர் ஊடாக வாபஸ் பெறப்பட்ட வழக்குகள் மீள கொண்டு வரப்படும் எனவும், அவை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாகத் தெரிகிறதெனவும், யார் விரும்பாவிட்டாலும், அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜூலை 17ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நடத்த அதிகாரம் அளிக்கப்படும் என்றும், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை கையளிப்பதற்காக இன்று (02) காலை நளிந்த ஜயதிஸ்ஸ வந்திருந்த போதே ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.