உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், 87 பேர் பலி! மேலும் உயரலாம் என அச்சம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமம் ஒன்றில் மத சத்சங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் மூச்சுத் திணறி பலியாகினர்.
27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 23 பேர் பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என தெரிய வந்தது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.