சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு குகதாசன் நியமனம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே மேற்படி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.