உலகின் முதல் ரோபோ தற்கொலை செய்து கொண்டது !

தென்கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டது.

தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ இதுவாகும்.

தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோவே உயிரிழந்துள்ளது.

ரோபோ தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரோபோவின் உடலை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோபோவின் ‘தற்கொலை’ குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. சில படிக்கட்டுகளின் அடிப்பகுதியில் ரோபோ செயலற்ற நிலையில் காணப்பட்டது, பின்னர், அது கீழே விழுவதற்கு முன்பு ஒரு கட்டிடத்தின் மேல் சுழல்வதை சாட்சிகள் பார்த்தனர்.

இந்த ரோபோ அரசு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளையின்றி வேலை செய்தது. இதை வடிவமைத்த நிறுவனம் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள அதன் பாகங்களை பகுப்பாய்வு செய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.