தோலை மட்டுமல்ல.. பாதாள உலக தலைவர் ஒருவரின் கறுப்புப் பணத்தையும் பியுமி வெள்ளையாக்குகிறார் – டிரான் அலஸ்

மாடல் அழகி பியுமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவரது சொத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என அவர் ஐலண்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க தனக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.

அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர் மேலும் மக்கள் உணரும் வகையில் நாளை முதல் நீதி நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.