ஜனாதிபதி தேர்தலுக்கும் , உள்ளுராட்சி மன்ற தேர்தலின் கதியா? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனு இதோ!

ஜனாதிபதி தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர், சி.டி.லெனவவினால் இந்த மனு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்க வேண்டுமென அதில் கோரப்பட்டுள்ளது.