அரகலய நேரம் பேர வாவியில் குளித்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் தஞ்சம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
அந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.
இது தொடர்பில் அவர் தனது முகநூலில் , கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெற்றிகரமான நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.