சட்டவிரோதமாகக் குறுகிய காலத் தங்குமிட வசதிகளை வழங்கிய 71 பேருக்கு அபராதம்.

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாகக் குறுகிய காலத் தங்குமிட வசதிகளை வழங்கிய 71 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (HDB) நகரச் சீரமைப்பு ஆணையமும் (URA) அந்தத் தகவலை இன்று வெளியிட்டன.

71 பேரில் 64 பேர் தனியார் வீடுகளில் அந்த வசதிகளை வழங்கினர். எஞ்சிய 7 பேர் கழக வீடுகளில் குறுகிய காலத் தங்கும் வசதிகளைச் செய்துகொடுத்தனர்.

தனியார் வீடுகளில் அத்தகைய வசதிகளை வழங்கிய
15 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

சிங்கப்பூர் சட்டப்படி, 3 மாதங்களுக்குக் குறைவாகத் தனியார் வீடுகளை வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது.

கழக வீடுகளை 6 மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு வாடகைக்கு விடுவதற்கும் அனுமதி இல்லை.

சென்ற மாதம் 15க்கும் மேற்பட்ட Airbnb விளம்பரங்கள், சிங்கப்பூரில் குறுகிய காலத் தங்கும் வசதிகளைத் தருவதை CNA கண்டது.

அது குறித்து CNA அறிக்கை வெளியிட்ட பிறகு Airbnb அந்த விளம்பரங்களை அகற்றியது.

குறுகிய காலத் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவதைப் பற்றிச் சந்தேகம் எழுந்தால் அவை விசாரிக்கப்படும் என்று HDB, URA தெரிவித்தன.

1800-555-6370 எண்ணைத் தொடர்புகொண்டு அல்லது URA இணையத்தளத்தில் மக்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.