“வேறு நாட்டின் குடியுரிமை வைத்திருப்போர் , அதை கைவிடவில்லை என்றால் சிங்கப்பூர்க் குடியுரிமையை இழக்க நேரும்”.

சிங்கப்பூரில் பல நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பவர்களை அடையாளம் காண பல வழிமுறைகள் இருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.

மற்ற நாட்டின் குடியுரிமையைக் கைவிட வேண்டும் அல்லது சிங்கப்பூர்க் குடியுரிமையை இழக்க நேரும் என்று அவர் சொன்னார்.

வேண்டுமென்றே மறைக்க நினைப்பவர்களைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல என்று சொன்ன அமைச்சர், நடைமுறைக் காரணங்களுக்காக, எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்ற விவரம் வெளியிடப்படுவதில்லை என்றார்.

2019 முதல் 2023 வரை ஆண்டுக்குச் சராசரியாகச் சுமார் 1,600 சிங்கப்பூரர்களிடம் சிங்கப்பூர்க் குடியுரிமையா அல்லது மற்ற நாட்டுக் குடியுரிமையா என்பதைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டதாகத் சண்முகம் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் எழுத்துபூர்வ பதில் தந்தார்.

Leave A Reply

Your email address will not be published.