பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில் நித்யா மேனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் நித்யா மேனன்.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் துவங்கி உள்ளன.
கிராமத்துப் பின்னணி, திருவிழா எனக் கலகலப்பாகவும் நல்ல குடும்பக் கதையாகவும் நகரும் கதைக்கு நித்யா மேனன் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் தரப்பு நம்புகிறதாம்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், நித்யா மேனன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி, நித்யா ஆகிய இருவருமே யதார்த்தமாக நடிக்கக் கூடியவர்கள்.