தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி!

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே.அத்வானி. 1990-களில் பெரிதாக ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை கட்சி குறித்து தெரிந்திடாதவர்கள் அத்வானியை நன்கு அறிவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடம் என்பதை தாண்டி காங்கிரஸ் கட்சியின் வீழ்த்த செய்யும் சக்தியாக பாஜக உருவாக மிக பெரிய காரணம் எல்.கே.அத்வானி.

பாஜக பெரும் சக்தியாக உருவெடுக்க அவரின் ரதயாத்திரை மிக முக்கிய காரணிகளில் ஒன்று. 1970-ஆம் ஆண்டில் முதன்முறையாக அத்வானி ராஜ்யசபா உறுப்பினராகி தொடர்ந்து 4 முறை 1989 வரை அப்பதவியை வகித்தார். 1977 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

அந்த தேர்தலில் ஜனதா கட்சியின் வெற்றியைத் அடுத்து அத்வானி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும், கட்சியின் ராஜ்யசபா அவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயுடன் இணைத்து 1980 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றிய அத்வானி, 1989-இல் பாஜகவின் சார்பாக முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் அத்வானி. கடந்த சில காலமாகவே வயதின் மூப்பின் காரணமாக, உடல் நலம் இன்றி மருத்துவ சிகிக்சையில் இருந்து வரும் அவர், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மதுரா சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.