வளர்ந்து கொண்டே போகும் அதிசய சிவலிங்கம் – பக்தர்கள் ஆச்சர்யம்!

வளர்ந்து கொண்டே போகும் அதிசய சிவலிங்கம் குறித்து காணலாம்.

ஆந்திர பிரதேசம், தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது 55 அடி உயரம் கொண்டது.

அதன் மேற்பகுதி மூடப்படாத நிலையில் கோயிலின் அமைப்பும் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்ஸ்தானதேஷா கோயிலை மேற்கூரையுடன் கட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் மூன்று முறை மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக திங்கட்கிழமை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை மாசம் மற்றும் மகா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அனைத்து பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை மண்டபத்தில் இருந்து செய்வோம் என்றும், தேவைப்பட்டால் ஒரு ஏணி வைத்து சிவலிங்கத்தின் உச்சியை அடைவோம் என்றும், கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பூசாரியின் கனவில் தோன்றிய சிவபெருமான் தான் தினம் தினம் வளர்வதாகவும், அதனால் இந்த கோவிலுக்கு மேற்கூரை கட்ட வேண்டாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.