சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் புகழுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்துக்கும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அமரர் சம்பந்தனின் உறவினருடன் ஆளுநர் தனது அனுதாபங்களையும் பகிர்ந்துகொண்டார்.