’20’ இற்கு எதிரான 39 மனுக்கள்: மூன்றாம் நாளாகப் பரிசீலனை!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவைச் சவாலுக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்டன.
குறித்த வரைவைச் சவாலுக்குட்படுத்தி 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட உள்ளிட்ட 5 பேரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் கடந்த 29ஆம் திகதி முதல் பரிசீலிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன.