தொழிலாளர் கட்சி , பிரிட்டனில் ஆட்சியைப் பிடித்தது.
பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இன்னும் பல தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 326க்கும் அதிகமான தொகுதிகளை கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரது கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை 70 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.