ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – DPமுதல் முறையாக பகிரங்கமாக தெரிவிப்பு.
நாட்டின் மிகப்பெரும் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் வரை காத்திருப்பதாகவும், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இன்று (5) காலை கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயிற்சியாளர்கள் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நம்பிக்கையில் தாம் செயற்படுவதாக தெரிவித்த தம்மிக்க பெரேரா, தேர்தலில் வெற்றிபெற தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது 44 வீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்போம் என தீர்மானிக்கவில்லை எனவும், சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு வருடங்களாக பிரசாரம் செய்து வருவதாகவும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை எனவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 90 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவார்கள் என்பதை விளக்க வேண்டியதன் அவசியத்தை தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.