பியுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW வாகனம் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டில்….
மாடல் பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு BMW காரை நாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கராஜில் இருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மாடி வீட்டில் இருந்து கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போன்றவற்றை விமான தபால் மூலம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இந்த வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூரியர் மூலம் 5 கிலோ குஷ் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் இறக்குமதி செய்தது தொடர்பாகவே அவர் கைதானார்.
கொழும்பு 10 பகுதியில் பிரதான வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகரான இந்த வர்த்தகர் அதன் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்த வருடத்தின் முற்பாதியில் நாவல பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்தமை தெரியவந்தது. போதைப்பொருள் கையிருப்புடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பின்னர், நாவல பாடசாலை மாவத்தைக்கு அருகில் உள்ள வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
பியுமி ஹன்ஸ்மாலிக்கும் சந்தேக நபருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனத்தை வாங்குவதற்காக பியூமிக்கு 10 மில்லியன் பணம் கொடுத்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சுமார் 50 மில்லியன் நிலுவைத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினர் பியுமி ஹன்சமாலியின் சொத்துக் குவிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் இந்த போதைப்பொருள் கடத்தல்காரனுடனான தொடர்பும் அம்பலமாகியுள்ளது.
பியூமி குற்றப் புலனாய்வுத் துறையின் முன் வந்து, பொறாமையால் தனது சொத்துக்கள் குறித்து தேடி அலைகிறார்கள் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும், போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் பியூமிக்கு தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது என காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் மறுநாள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலதிக விசாரணை நடந்து வருகிறது.