சாவக்கச்சேரி வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் , அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்ததோடு , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து அவரது வாகனத்தில் தனியாகவே கொழும்பு செல்வதாக மக்களிடம் விடைபெற்று சென்றார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இன்று காலை ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது ஏ – 9 வீதியூடான போக்குவரத்துப் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
வீதியை மறித்துப் போராடுவது சட்டவிரோதமானது எனப் பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாகத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.