அவதார் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜேம்ஸ் கேமரூன்..

ஹாலிவுட் படங்களில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் அவதார். இந்தப்படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் சினிமா திரையுலகிற்கே சவால் விடுக்கும் அளவுக்கு இருந்தது.
இதனுடைய அடுத்த பாகம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், அவதார்1 இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், அவதார்2 மற்றும் அவதார்3 ரிலீஸ் தேதியை திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவதார்- 2 படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், வரும் 2022 ஆண்டு டிசம்பர் 16-ம் ரிலீஸாகவுள்ளது.
மேலும் அவதார்- 3 படப்பிடிப்பு 95% முடிவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வருவதால், அவதார் மூன்றாம் பாகமும் டிசம்பர் 20, 2024-ல் ரிலீசாகிவிடும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவதார் நான்காம் பாகம் 2026-லும், ஐந்தாம் பாகம் 2028-லும் திரையரங்கில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.