கிளப் வசந்தவை கொல்ல நடந்த சதி : டாட்டூ பார்லர் உரிமையாளர் துலான் கைது – கொலைக்காக பெற்ற ஒரு மிலியன், வங்கியிலிருந்து சிக்கியது ….(Video)

கிளப் வசந்த கொலை குறித்து விசாரணை நடத்திய பொலிசார், பச்சை குத்தும் நிறுவன உரிமையாளர் துலான் சஞ்சுலாவை கைது செய்ததுடன், துபாயில் இருந்து பெற்ற ஒப்பந்தத்தின்படி கிளப் வசந்தவை தனது நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு துலான் அழைத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

டுபாயில் இருந்து பச்சை குத்தும் நிறுவன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பத்து லட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“துபாயில் இருந்து வந்த ஒப்பந்தத்திற்கு அமைய நான் கிளப் வசந்தவை கொல்ல உதவினேன். அந்த திட்டத்தின்படி பச்சை குத்தும் கடை திறப்பு விழாவிற்கு வசந்தாவை அழைத்து வந்து கொலை செய்யும் திட்டத்தை செயல்படுத்தினர். அதற்காக துபாயில் இருந்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டேன்” என கிளப் வசந்தாவின் கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்துரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல பொலிஸ் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இவரிடம் பச்சை குத்திக்கொள்ளும் திறமை இருந்ததாகவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு அவரிடம் பணம் இல்லை எனவும் கூறப்படுகிறது. பலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இவருடைய நண்பரின் ஊடாக வெளிநாட்டவர் ஒருவரின் தொடர்பு கிடைத்த நிலையில் குறித்த வெளிநாட்டவர் பச்சை குத்தும் நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு பணம் தருவதாக சம்மதித்துள்ளதுடன் அதற்காக பணத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

டாட்டூ பார்லர் திறப்பு விழாவை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உள்ளிட்ட சில பிரபலங்களை அழைக்குமாறு, வெளிநாட்டில் இருந்து வந்த நபர், டாட்டூ பார்லர் உரிமையாளரிடம் தெரிவித்த போதே, கொலை திட்டம் தெரிய வந்ததாகவும் , ஆனால் பணம் கொடுத்தவர்களது திட்டத்துக்கு அமைய கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் இந்த இடத்தை வாடகை அடிப்படையில் எடுத்ததோடு , கிளப் வசந்தாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நிலையில் , இந்த திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதுருகிரி நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் பச்சை குத்தும் நிலையம் அமைக்கப்பட்டு, அதன் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி, பாடகி கே.சுஜீவா ஆகியோருடன் சிலரை தொடக்க விழாவுக்கு அழைத்துள்ளார்.

நேற்று (08) காலை கிளப் வசந்தவும், அவரது மனைவியும் பாடகியுமான கே. சுஜீவா உள்ளிட்ட சிலர் டாட்டூ நிறுவனத்துக்கு வந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், விருந்தினர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்ததால், திடீரென வந்த கொலையாளிகளிடம் இவர்கள் அசைய முடியாதபடி மாட்டிக் கொண்டனர். விருந்தினர்களுடன் இடதுபுறத்தில் இருந்த நிறுவன உரிமையாளருக்கு எதுவித காயமும் ஏற்படவில்லை. சோபாவில் அமர்ந்து இருந்த நால்வரும் சுடப்பட்டனர்.

கிளப் வசந்தவும் மற்றவர்களும் மேல் தளத்தில் உள்ள டாட்டூ ஸ்டுடியோவிற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே , வெள்ளை நிற காரில் வந்த ஆயுதம் ஏந்திய இரண்டு கொலையாளிகள் உள்ளே புகுந்தனர். முகமூடி அணிந்த அந்த இரண்டு கொலையாளிகள் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் பச்சை குத்தும் நிலையத்திற்குள் நுழைந்து கிளப் வசந்த மற்றும் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த கிளப் வசந்த உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே கிளப் வசந்த உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் காயமடைந்த நயன என்ற நபரும் இறந்துவிட்டார், அவர் கிளப் வசந்தவின் மெய்க்காப்பாளர் என்று கூறப்படுகிறது.

கிளப் வசந்தவின் மனைவிக்கு மார்புப் பகுதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளப் வசந்தவின் மனைவி சத்திரசிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதுடன் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் களுபோவில போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

பாடகி கே. சுஜீவாவும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடகைக் கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்ற வெள்ளை நிற கார் நவகமுவ கொரதொட்ட பிரதேசத்தில் விட்டுச் சென்றிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் கொரத்தோட்ட பகுதியில் காரை விட்டுவிட்டு மீண்டும் வெள்ளை வேன் ஒன்றில் தப்பிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் அந்த வெள்ளை வேனும் புலத்சிங்களவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சோதனையிட்டதில், அவை போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனங்கள் என தெரியவந்துள்ளது.

சன்ஹில் ஹோட்டல் குழுமத்தின் உரிமையாளரான கிளப் வசந்த, பல தொழில்களை நடத்தி வருக்கிறார். இவர் பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது உட்பட பல தொழில்களை செய்து வந்துள்ளார்.

கடந்த காலங்களில் கிளப் வசந்த , அவரிடமிருந்த பல சன்ஹில் ஹோட்டல்களை விற்றுள்ளதாகவும், அந்த ஹோட்டல்களை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை தான் வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

நுவரெலியா, கொழும்பு மரைன் டிரைவ் மற்றும் சீதுவ லியனகேமுல்ல பிரதேசங்களில் சன்ஹில் ஹோட்டல்கள் கட்டப்பட்டிருந்தன.

கொழும்பில் உள்ள பல இரவு விடுதிகளின் உரிமையாளராகவும் இருந்த அவர், பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், பிரபல விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள், பணக்காரர்கள், உயரதிகாரிகள், நாட்டின் உயர்பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என பலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தொழிலதிபராகவும் இருந்தார். .

இலங்கையின் முக்கிய பாதாள உலக தலைவர்கள் சிலருடன் கிளப் வசந்த தொடர்பு கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது பாதாள உலக மோதலா அல்லது தனிப்பட்ட தகராறினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தலைமையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் கிடந்ததைக் கண்டுபிடித்த,T-56 வெற்று தோட்டாக்களில் KPI என்ற ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.

குறித்த KPI என்ற ஆங்கில எழுத்துகள் கஞ்சிபானி இம்ரானின் பெயருக்குரிய அடையாளம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார், துபாயில் இருந்த காஞ்சிபானி இம்ரான் மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோர்
உயிரிழந்த கிளப் வசந்த பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே
சிக்கினார்கள் என நம்பப்படுகிறது. அந்த துரோகத்திற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடத்தப்பட்டதாக ஒரு யூகம் சந்தேகம் உள்ளது.

பிந்திய இணைப்பு
2019ஆம் ஆண்டு துபாயில் பாதாள உலகக் குழுத் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததில் கிளப் வசந்தவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாகதுரே மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் கிளப் வசந்தவிடம் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் , தனது பணத்தை தருமாறு கேட்டும், கிளப் வசந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியா பிரதேசத்தில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில் அது தோல்வியடைய, அத்துரிகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்த 03 மாதங்களாக திட்டமிட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. .

Video

Leave A Reply

Your email address will not be published.