ஹாத்ரஸ் வழக்கு: “குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்” – டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளியை தூக்கில் போடுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி, பீம் ஆர்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதில் கலந்து கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் அடிக்கடி இதுபோன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடக்கின்றன. அவை உத்தர பிரதேசத்திலோய மத்திய பிரதேசத்திலோ, ராஜஸ்தானிலோ, மும்பையிலோ, டெல்லியிலோ என எங்கு நடந்தாலும், அதில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. அத்தகைய சம்பவங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று கூறினார்.

“சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், குற்றவாளிகளை தூக்கில் போடுமாறு உத்தர பிரதேச மாநில அரசை எனது இரு கரங்களைக் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்” என்று கேஜ்ரிவால் பேசினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பலர் காந்தியின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூரும் வகையில் அரை ஆடையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஹாத்ரஸ்

இதேவேளை, டெல்லி வாக்மீகி மந்திர் பகுதியில் உள்ள ஆலயத்தில் ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்காக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தப்பட்ட அமைதிப்பிரார்த்தனை கூட்டத்தில் பிரியங்கா வாத்ரா கலந்து கொண்டார்.

உத்தர பிரதேச முதல்வர் உறுதி

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை கிடைக்காத வகையிலான தண்டனை நிச்சயம் பெற்றுத் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் அவர், நமது தாய்மார்கள், சகோதரிகளின் மதிப்புக்கு பங்கம் விளைவிக்க முற்படுவோருக்கு இதுவரை கிடைத்திராத முன்மாதிரியான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதேவேளை, ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஊடகங்கள் சென்று செய்தி சேகரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹாத்ரஸில் எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அம்மாநில காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி மறுத்தன.

இந்த விவகாரத்தில், ஹாத்ரஸ் மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழையாத வகையில் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் ஊர் எல்லைக்கு வெளியே வயல்வெளியில் ஓடி வருவதை பார்த்து அவரை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டன. அவரை போலீஸ் குழு ஒன்று துரத்தி வருவதையும் தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பின.

இதையடுத்து அந்த சிறுவன் வேறு வழியாக தப்பி ஊடகங்கள் முன்பு தோன்றி, “எங்களின் செல்பேசிகளை காவல்துறையினர் பறித்து விட்டனர். எங்களுடைய மாமாவை ஒரு அதிகாரி அடித்து விட்டார். எங்களுடைய குடும்பத்தினர் எப்படியாவது ஊடகங்களை அழைத்துவா, அவர்களுடன் நாங்கள் பேச விரும்புகிறோம் என்று கூறு என்று தெரிவித்து என்னை அனுப்பி வைத்தனர்” என்று கூறினார்.

அந்த சிறுவனின் பாதுகாப்பு கருதி அவரது பெயரையும் அவரது காட்சிகளையும் பிபிசி வெளியிடவில்லை.

 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஹாத்ரஸ் நோக்கிச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெரக் ஓ ப்ரெயின், பிரதிமா மொண்டல், முன்னாள் எம்.பி மமதா தாக்கூர் ஆகியோர், அந்த மாவட்ட எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹாத்ரஸ்

அங்கு மாவட்ட இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தலைமையில் காவல்துறையினர் நின்று கொண்டு, மூன்று பேரும் மேற்கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.

ஹாத்ரஸ்

இதையடுத்து மூன்று பேரும் தங்களின் கைகளை எடுத்துக் கும்பிட்டு, “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று கூறினர்.

ஹாத்ரஸ்

“அது முடியாது போனால், குறைந்தபட்சம் பெண் தலைவர்களையாவது அவர்களை சந்திக்க அனுமதி தாருங்கள்” என்று டெரக் ஓ ப்ரெய்ன் கேட்டுக் கொண்டனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ஆனால், அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில், தடையை மீறி நடந்து செல்ல மூன்று பேரும் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திடீரென்று டெரக் ஓ ப்ரெய்ன் கீழே விழுந்தார். இது தொடர்பான காணொளியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

மற்ற இரு பெண் தலைவர்களில் ஒருவரின் தோளை பிடித்து காவலர்களுடன் இருந்த ஹெல்மெட் அணிந்த ஒருவர் பின்னோக்கித் தள்ளுவதை பார்க்க முடிந்தது. பிறகு அவர்கள் சாலையில் அமர்ந்து சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

அவர்களைச்சுற்றிலும் உத்தர பிரதேச மாநில ஆயுதப்படையினர் சூழந்து கொண்டு மேலும் செல்லக்கூடாது என்று எச்சரித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இதையடுத்து பேசிய டெரக் ஓ ப்ரெய்ன், “ஹாத்ரஸ் நோக்கி அமைதியாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி கூட்டமாக அல்லாமல் தனித் தனியாக நாங்கள் சென்றோம். ஆனால், எங்களை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாங்கள். ஹாத்ரஸில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து இரங்கல் தெரிவிக்கக் கூட எங்களுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் டெல்லி திரும்பினர்.

இணை ஆட்சியர் மறுப்பு

ஹாத்ரஸ் செல்ல முயன்ற தலைவர்களிடம் தடையை மீறி அங்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபோது அதையும் பெண் தலைவர்கள் முன்னேற முயன்றதாக இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். அவர்களை பெண் காவலர்கள் தடுக்க மட்டுமே செய்ததாகவும் ஆண்கள் எவரும் பெண் தலைவர்களை தொடவில்லை என்றும் பிரேம் பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறினார்.

 

னார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

ஆனால், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் ஒரு பெண் தலைவரின் தோளை பிடித்து ஹெல்மட் அணிந்தவர் பின்னோக்கித் தள்ளுவதையும் அதை டெரக் ஓ ப்ரெய்ன் தட்டிக்கேட்டபோது நடந்த தள்ளுமுள்ளுவில் அவர் கீழே தள்ளி விடப்பட்டதையும் காண முடிகிறது.

ராகுல், பிரியங்கா மீது வழக்குப் பதிவு

முன்னதாக, ஹாத்ரஸ் விவகாரத்தில் புதன்கிழமை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா வாத்ரா ஆகியோர் ஹாத்ரஸ் நோக்கிச் செல்ல முற்பட்டபோது பாதி வழியிலேயே கிரேட்டர் நொய்டா எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். பிறகு அவரையும் பிரியங்கா வாத்ராவையும், புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் கார் பந்தய மைதானத்தின் விருந்தினர் இல்லத்தில் தடுத்து வைத்த காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் கழித்து இருவரையும் டெல்லிக்கு போலீஸ் காவலுடன் அனுப்பி வைத்தனர்.

ஹாத்ரஸ்

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதை கண்டித்து கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தினரை உத்தர பிரதேச காவல்துறையின் ஆயுதப்படையினர் கலைத்தனர்.

இதற்கிடையே, பெருந்தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த கட்டுப்பாடுகளை மீறி, கூட்டமாக ஹாத்ரஸ் நோக்கிச் செல்ல முயன்றதாக ராகுல், பிரியங்கா மீதும் அவர்களுடன் வந்த சுமார் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு

ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அவசரமாக எரிக்க கட்டாயப்படுத்திய காவல்துறையினர் நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

மகளை இழந்து வாடும் பாதிக்கப்பட்ட பெற்றோர், ஊடகங்களிடமோ அரசியல் தலைவர்களிடமோ பேசக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவர்களின் செல்பேசிகள் பறிக்கப்பட்டு வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

இதே தகவலை ஏஎன்ஐ செய்தி முகமை செய்திப்பிரிவு தலைவர் நவீன் குமாரும் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாத்ரஸ் சம்பவம் மிகவும் வலியைத் தருவதவாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நடந்து கொள்ளும் செயல்பாடு சரியல்ல என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்றும் கேஜரிவால் தெரிவித்தார்.

ஹாத்ரஸ் சம்பவத்தில் எதையோ மறைக்க உத்தர பிரதேச அரசு முயல்வதாக சந்தேகம் கொள்கிறேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்தார்.

ஜாதி போராட்டமாக உருவெடுக்கும் சம்பவம்

இதற்கிடையே, ஹாத்ரஸில் பெண் உயிரிழந்த சம்பவத்தை அவர் சார்ந்த பட்டியனத்துக்கும் குற்றம்சாட்டப்பட்ட தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்த்வர்களுக்கும் இடையிலான பகைமை பிரச்னையாக மாற்ற முற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் ஒன்று திரண்டு வரும் நிலையில், தாக்கூர் சமுதாயத்துக்கு ஆதரவாக உள்ளூர்வாசிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.