உக்ரேனுக்கு ஆகாயத் தற்காப்பு ஆயுதங்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) உக்ரேனுக்குக் கூடுதல் ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வாஷிங்டனில் உச்சநிலைச் சந்திப்பு நடைபெறுகிறது.
அதில் தொடக்க உரையாற்றிய திரு பைடன், அமெரிக்காவுடன் ஜெர்மனி, நெதர்லந்து, ரொமேனியா, இத்தாலி ஆகிய 4 நட்பு நாடுகளும் Patriot ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதத் தொகுப்பை உக்ரேனுக்கு வழங்கவிருப்பதாக உறுதிகூறினார்.
இன்னும் சில மாதங்களுக்குப் பின் அமெரிக்கா கூடுதல் ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கவிருக்கிறது.
பிரிட்டன், கனடா, நார்வே, ஸ்பெயின் ஆகியவையும் சேர்ந்து ஆயுதங்கள் வழங்கும்.
உக்ரேனிய அதிகாரிகள் நேற்றுதான் கூடுதல் ஆகாயத் தற்காப்பு ஆயுதங்கள் தேவைப்படுவதாகக் கேட்டுக்கொண்டனர்.
ரஷ்யா அண்மையில் நடத்திய தாக்குதலில் சிறார் மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்டது.
36 பேர் பலியாயினர், 140 பேர் காயமுற்றனர்.