“போரால் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை” – புட்டினிடம் கூறிய மோடி.
ரஷ்யா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் (Vladimir Putin) சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அவர் போரால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடாது, பேச்சுவார்த்தை மூலமே அமைதி ஏற்படவேண்டும் என்று திரு புட்டினிடம் கூறினார்.
கீவ்வில் இருக்கும் சிறார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவிப் பிள்ளைகள் மாண்டது பெரும் வருத்தத்தைத் தருவதாகத் திரு மோடி தெரிவித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்கும் நேரத்தில் தலைவர்களின்ன சந்திப்பு இடம்பெறுகிறது.
ஈராண்டுக்கு முன்பு உக்ரேனியப் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாகத் திரு மோடி ரஷ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தியாவும் ரஷ்யாவும் இருநாட்டு நல்லுறவை மேம்படுத்த முயல்கின்றன.
அவை நெடுங்காலமாக நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடாக விளங்குகிறது ரஷ்யா.
குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெயை வாங்குகிறது.
ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவுகுறித்து அமெரிக்கா கவலைதெரிவித்திருக்கும் வேளையில் இருதரப்பு உறவை இன்னும் ஆழமாக்கும் முயற்சியாகத் திரு புட்டின் திரு மோடியை வரவேற்றுள்ளார்.