அஜித்தின் ‘வலிமை’ க்கு பலம் சேர்க்கும் உலக சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள்
தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் தல அஜித்தின் ‘வலிமை’.
சென்ற ஆண்டு வெளியான ‘நேர்கொண்டபார்வை’ படத்திற்கு பிறகு இயக்குனர் H.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் தல அஜித்துடன் இணைந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு சண்டைக் காட்சி என்பதால் உலக சினிமாவில் முன்னணி வகிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களை வரவழைக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சும்மாவே அஜித் படத்தில் சண்டைக்காட்சிகள் பட்டையைக் கிளப்புவது வழக்கம். அதிலும் இந்தப்படத்தில் கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் இருக்கும் தல அஜித்துக்கு படு மாஸ் ஆன சண்டைக் காட்சிகள் இடம்பெறுவது நிச்சயம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் சென்னை புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் தல அஜித்தை வைத்து சண்டை காட்சிகளை படமாக்கப் போவதாக தெரிகிறது.