வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு
தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த இரண்டு நாள் அரச சேவை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத மற்றும் இரண்டு நாட்களும் பணிக்கு வருகை தந்த அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்மொழிந்துள்ளத பிரேணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி பல தொழிற்சங்கங்கள் நேற்று (09) மற்றும் நேற்று முன்தினம் (08) அமுல்படுத்திய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்காமல் பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கைகளை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் ஆகியோருக்கு அறிவிக்குமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.