ரயில் நிலையங்களில் ராணுவ பாதுகாப்பு!
நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 45 புகையிரத நிலையங்களுக்கு இராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை, பேராதெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, அம்பேவெல, புத்தளம், சிலாபம், மாதம்பை, நாத்தாண்டிய, அலவ்வ, பொல்கஹவெ, குருநாகல் போன்ற 45 புகையிரத நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய, புகையிரத நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸாருக்கு உதவ இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து, நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (9) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, புகையிரத நிலையங்களுக்கு இராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அனுப்புமாறு இராணுவத் தளபதி பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.