சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி நடாத்தும் இரத்ததான முகாம்

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியின் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரன் அவர்களின் நினைவாக 18.06.2020 (வியாழக்கிழமை) அன்று இரத்ததான முகாம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர்.
விலைமதிப்பற்ற உயிரைக்காக்கவல்ல இரத்ததானம் செய்யும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இச் சேவையிலும் கலந்து கொள்ளுமாறு சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி சமூகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இரத்ததானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…
- இரத்ததானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல… நாமும்தான்.
- உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
- ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.
- மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.
- உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.