ஆணாக மாறிய பெண் IRS அதிகாரி – வரலாற்றில் முதல் முறை!
ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் தனது பாலினம் மற்றும் பெயரை மாற்றியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் எம்.எஸ்.எம்.அனுசுயா. இவர் அங்குள்ள மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றக் கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய்த் துறையிடம் அனுசுயா மனு அளித்துள்ளார். இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை மத்திய நிதி அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
அதில், கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாகவும், இனிமேல் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அனுசுயா ‘Mr எம்.அனுகதிர் சூர்யா’ என்று அங்கீகரிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றிலேயே பெண்ணிலிருந்து ஆணாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐ.ஆர்.எஸ் அதிகாரி என்ற பெருமையை அனுகதிர் சூர்யா பெற்றுள்ளார்.