வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் : ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கான வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விசேட உத்தரவின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வேலைத்திட்டம் அடங்கிய குழு அறிக்கை அமைச்சரவைக்கு கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.