ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்தவை சட்டமா அதிபராக நியமிக்க அனுமதி – அரசமைப்புப் பேரவையின் முடிவை அறிவித்தார் சபாநாயகர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சபாநாயகரின் தலைமையில் அரசமைப்புப் பேரவை இன்று கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசமைப்புப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, அண்மையில் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.