ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எழுத்துமூலம் தனது ஆட்சேபனைகளை சமர்ப்பித்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​இளைஞன் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர, 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதால், தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் பிணை கோரிக்கைக்கு தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.