ஜெர்மனிக்கு அமெரிக்க ஏவுகணை.

அமெரிக்கா தொலைதூரம் பாய்ச்சக்கூடிய ஏவுகணைகளை ஜெர்மனிக்கு அனுப்பவிருக்கிறது.

2026முதல் ஏவுகணைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா கூறியது.

நேட்டோ கூட்டணிக்கும் ஐரோப்பியத் தற்காப்புக்கும் அது உதவும் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.

SM-6 ரக ஏவுகணை மற்றும் Tomahawk ஏவுகணை இரண்டுமே ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.

500 கிலோமீட்டருக்கு மேல் பாயக்கூடிய நிலம்சார்ந்த ஏவுகணைகள் 2019ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டிருந்தன.

கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அணுவாற்றல்மிக்க இடைநிலை, குறுந்தொலைவு ஏவுகணைகளின் உற்பத்தியை மாஸ்கோ தொடரவேண்டும் எனக் கூறியிருந்தார்.

அமெரிக்கா அத்தகைய ஏவுகணைகளை ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் கொண்டுவந்ததைத் தொடர்ந்து திரு. புட்டின் அவ்வாறு சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.