திசைகாட்டி (NPP) கூட்டுறவு சங்கம் அழுகிய பருப்பை கழுவி விற்பனை .. PHI சோதனை மற்றும் திசைகாட்டி மேலாளர் கைது..

பொல்பிட்டிகம கூட்டுறவு களஞ்சியசாலையில் மீண்டும் மனித பாவனைக்கு லாயக்கற்ற பருப்பு கையிருப்பு கழுவப்பட்டு பதப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொல்பிட்டிகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்து 600 கிலோ பருப்புகளுடன் கடைக்காரர் மற்றும் முகாமையாளரை கைது செய்தனர்.

பொல்பித்திகம மற்றும் மடகல்ல கூட்டுறவு களஞ்சியசாலையில் உள்ள பருப்புகளில் புழுக்கள் இருந்தமையால் , அவை மனித நுகர்வுக்கு தகுதியற்றவையாக இருந்தமையால், பொல்பித்திகம பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஜி.ஜி.என்.டி. கமகேவின் பணிப்புரையின் பேரில், பொல்பித்திகமவைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று இரண்டு இடங்களையும் சுற்றிவளைத்துள்ளது.

அதிகாரிகள் அங்கு சென்றபோதும் சில பருப்பு வகைகள் கழுவப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். “இந்த கூட்டுறவு சங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

அகப்பட்ட பருப்பு நுகர்வுக்கு ஏற்றதல்ல என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவை மக்களுக்குக் கொடுப்பதற்காகக் கழுவி உலர்த்தப்படுவதில்லை. திருப்பி அனுப்புவதற்காகவே உலர்த்தப்பட்டது என கதை விட்டுள்ளனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதன் பிரகாரம் பருப்பு கையிருப்புடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக வைத்திய அதிகாரி ஜி.ஜி.என்.டி. கமகே மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.