மற்றொரு வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் நேற்று (11) தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.