புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் , நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த பரீந்த ரணசிங்கவின் பெயரை, சட்டமா அதிபர் பதவிக்காக, அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சபை ஏகமனதாக அந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளது.