பொதுமக்களின் பாதுகாப்பு நிச்சயமற்ற நிலையில், போலீசார் நாடகமாடுகின்றனர் – பிரியந்த ஜயக்கொடி.
நாட்டில் தற்போதுள்ள பாதுகாப்பு நிச்சயமற்ற நிலையில் காணப்படுவதாகவும், பொலிஸார் வெறும் நாடகம் போடுவதாகவும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இணைய சேனலுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மேலும் பிரியந்த ஜெயக்கொடி 2021 இல் ஓய்வுபெறும் போது குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றியிருக்கிறார்.
இந்த உரையாடலில் கலந்து கொண்ட அவர், சில பொலிஸ் அதிகாரிகளின் மன நிலை மற்றும் நடத்தை குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.