கோவிட் தொற்றுடன் டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று காலை புதிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
டிரம்ப் ஹெலிகாப்டரில் நுழைந்து தரையிறங்கியதாகவும், அவரை மரைன் ஒன் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் வெள்ளை மாளிகைக்கு வெளியே நின்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்பை வைரஸுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து முகமூடிகளை நிராகரித்து வந்த ட்ரம்ப், முகமூடி அணிந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் வேட்பானரான பைடனை கேலி செய்து வந்தார். பைடன் முகமூடிகளை தொகையாக வாங்கி வைத்து சேகரிப்பதாக நக்கல் அடித்ததோடு , எனக்கு தேவைப்பட்டால் முகமூடி அணிவேன் என கருத்து தெரிவித்து வந்தார்.
டிரம்ப், முகமூடி அணிந்தபடி ஹெலிகாப்டருக்குச் சென்ற போது, அங்கே தங்கியிருந்த செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துவிட்டார். கையை மட்டும் காட்டிவிட்டு நகர்ந்து சென்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ஒரு இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அங்கு தொடர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றுவார் என்றும் வெள்ளை மாளிகை கூறுகிறது.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கைலி மெக்னானி கூறுகையில், ஜனாதிபதி நலமாக உள்ளார், லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பு அமெரிக்க அதிபர் போட்டியாளரான பைடன் , டிரம்ப் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின் டிரம்புக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களை அகற்றிக் கொண்டுள்ளார்.