பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் கார் விபத்து!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் நுழைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கார் மீது மோதாமல் இருக்க சாரதி செயற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது வேறு எவருக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் பயணித்த வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பள்ளத்தில் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கருவலகஸ்வெவ பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.