ஜனாதிபதி வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க பெரும் தொகை தேவை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக அச்சகத்தின் தலைவர் திருமதி கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திருமதி லியனகே குறிப்பிடுகின்றார்.