பொன்சேகா குறித்து SJB எடுத்துள்ள முடிவு?
சரத் பொன்சேகா தனது சொந்தக் கட்சியையும் கட்சித் தலைவரையும் அவ்வப்போது திட்டுவதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். பொன்சேகா எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் இது யாருக்கும் ஆச்சரியமாக இருக்கவில்லை.
ஆனால், கட்சியை இவ்வளவு சேதப்படுத்தியும், பொன்சேகாவுக்கு எதிராக ஏன் SJB எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் பலருக்குப் பிரச்சினையாக இருந்தது.
பொன்சேகா மீண்டும் வந்தால் , கட்சியின் எந்தப் பணிகளிலும் பங்கேற்க விடுவதில்லை என SJB முடிவு செய்துள்ளது.
இனிமேல் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கும் அவரை அழைப்பதில்லை என முடிவாகியுள்ளது.