மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள்
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்துள்ளமை தொடர்பில் சர்வதேச சமூகம் மத்தியில் சிறந்த கௌரவம் காணப்படுகின்றது. எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதைச் செய்துள்ளோம். இது பற்றி அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது.
நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, உணர்வு அரசியலுக்குப் பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.