டொனால்ட் டிரம்ப் மேடையில் அசம்பாவிதம் :துப்பாக்கி சூடு நடந்ததா? (Video)

டொனால்ட் டிரம்பின் வலது காதைச் சுற்றி இரத்தம் கசியும் நிலையில், ​​மேடையில் இருந்து வெளியேறினார். அவரது தலையின் வலது பக்கம் ஒரு தோட்டா தாக்கியது போல் தெரிகிறது. (எனவே அவர் வலது பக்கத்தில் சுடப்பட்டது போல காண முடிகிறது. காதைச் சுற்றி இரத்தப்போக்கு). பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு நடந்தது.

பென்சில்வேனியாவில் (Pennsylvania) பிரசாரம் செய்துவரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மேடையில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டைப் போன்ற வேகமான சத்தம் கேட்டதே அதற்குக் காரணம் என்று AFP செய்தி கூறுகிறது.

டிரம்ப்பின் வலது காதில் ரத்தம் காணப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

டிரம்ப் நலமுடன் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பிரசார பகுதியில் இருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

“சத்தம் கேட்டதும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். அனைவர் முகத்திலும் ஒருவித குழப்பம் தென்பட்டது. பட்டாசு வெடிப்பும் சிறிய ரகக் கைத்துப்பாக்கியும் கலந்ததுபோல் அந்த வேட்டுச் சத்தம் கேட்டது” என்று டிரம்ப்பின் பிரசாரக் கூட்டத்தில் முதல்முறையாகப் பங்கேற்ற
ஒருவர் AFP செய்தியிடம் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி அதிபர் ஜோ பைடனுக்குத் (Joe Biden) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்தி
பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்ததைத் தொடர்ந்து மேடையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் டிரம்ப் நலமாகவும் , பாதுகாப்பாகவும் இருப்பதாக அமெரிக்க இரகசிய சேவை மற்றும் அவரது பிரச்சார குழு சற்று முன் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.