ஹமாஸ் ராணுவத் தலைவர் முஹமது டயிஃபை குறிவைத்த தாக்குதல் – 71 பாலஸ்தீனர்கள் மரணம்.

காஸாவில் ஹமாஸ் ராணுவத் தலைவரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் குறைந்தது 71 பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
மனிதாபிமானப் பகுதியில் அந்தத் தாக்குதல் இடம்பெற்றது.
குறிவைக்கப்பட்ட ராணுவத் தலைவர் முஹமது டயிஃப் (Mohammed Deif) மாண்டாரா என்பது குறித்துத் தகவல் இல்லை என்று ஹமாஸ் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் தரப்பில் இருக்கும் மனிதாபிமானப் பகுதிக் கட்டடத்தில் டயிஃப் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதி தெற்கில் கான் யூனிஸ் நகரில் அமைந்துள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவர் டியிஃப்.
அவரைக் கொல்ல இஸ்ரேல் 7 முறை முயன்றும் அவற்றிலிருந்து உயிர்தப்பியவர்.