வேலைக்குச் செல்லும் வழியில் மாண்ட விமானிகள்.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இரு விமானிகள் விபத்தில் சிக்கி மாண்டனர்.

அந்த Ryanair விமானிகள் லிவர்பூல் விமான நிலையத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.

இரு லாரிகளும் ஒரு காரும் விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாய் BBC செய்தி நிறுவனம் கூறியது.

மாண்ட 28 வயது மாட் கிரீன்ஹால்கும் 24 வயது ஜேமி பெர்னாண்டஸும் டாக்சியில் இருந்தனர்.

இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக BBC தெரிவித்தது.

டாக்சி ஓட்டுநர் கடுமையான காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த சந்தேகத்தின்பேரில் 61 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.