“இந்த நூற்றாண்டின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா”.
இந்த நூற்றாண்டில் உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா என்று அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
World Population Prospects 2024 எனும் அறிக்கையை ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்டது.
உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனாவாக முன்பு இருந்தது.
சென்ற ஆண்டு இந்தியா அந்த இடத்தைத் தட்டிச் சென்றது.
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 1.45 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகை சுமார் 1.41 பில்லியன்.
2060களின் ஆரம்பத்தில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.7 பில்லியனை எட்டிய பிறகு 12 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் அந்நாடு பெரும் பொருளாதார, சுற்றுப்புறம் சார்ந்த அழுத்தங்களை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.