என் அப்பா கூட என் அளவு வேலை செய்யவில்லை – சஜித் பிரேமதாச

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக SJB தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாம் உழைக்க முடியாத தலைவரோ , கதையளப்பவனோ இல்லை எனத் தெரிவித்த அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்காக உழைத்த ஒரே சக்தி தமது கட்சியே எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் எதிர்க்கட்சியில் இருந்த போது நாட்டுக்காக உழைக்கவில்லை. ஆனால் நான் எதிர்க்கட்சியில் இருந்து உழைத்துள்ளேன்.
களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்ற SJB பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.