தனது முதல் வாக்களிப்புக்கு முன் டிரம்பை கொல்ல முயன்ற நட்சத்திர விருது பெற்ற பட்டதாரி இளைஞன்!
கணிதம் மற்றும் அறிவியல் அறிவை சோதிக்கும் தேசிய போட்டியில் நட்சத்திர விருது பெற்ற இளம் 20 வயது பட்டதாரி இளைஞன்…
சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய முயன்ற நபர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் என FBI அடையாளம் கண்டுள்ளது.
பென்சில்வேனியாவின் பட்லரில் ஒரு பேரணியில் பேசும்போது டிரம்பின் மேடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சம்பவம் நடந்த சில நொடிகளில் ரகசிய சேவையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கான நோக்கத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் FBI, பேரணியில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாகவும், பேரணியில் கலந்துகொண்ட இருவர் படுகாயமடைந்ததாகவும் கூறியுள்ளது மற்றும் அந்த துப்பாக்கிச் சூட்டில் டிரம்பின் காதுமடல் துளைக்கப்பட்டது.
பட்லரில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து மேத்யூ க்ரூக்ஸ் ஒரு மணி நேர பயண தூரத்தில் வாழ்ந்த ஒருவராவார். மாநில வாக்காளர் பதிவில் க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சி ஆதரவாளர் என தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மத்தேயு க்ரூக்ஸ் தனது வாழ்நாளில் முதன்முறையாக வாக்களிக்கவிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வயதை எட்டுவது இதுவே அவருக்கு முதல் முறை.
க்ரூக்ஸின் தந்தை, 53 வயதான மேத்யூ க்ரூக்ஸ், என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக அறிய முற்படுவுதாகக் கூறினார். அவர் தனது மகனைப் பற்றி பேசுவதற்கு முன்பு சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேச காத்திருப்பதாக கூறியுள்ளார்.
தோமஸ் க்ரூக்ஸ் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் 2022 இல் பட்டம் பெற்றவர். அவர் கணிதம் மற்றும் அறிவியலை ஆராயும் தேசிய நிகழ்வான National Math and Science Initiative போட்டியில் $500 “நட்சத்திர விருது” பெற்றவர்.
நியூயார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டிய 2022 பட்டமளிப்பு விழாவின் வீடியோ , க்ரூக்ஸ் அவரது உயர்நிலைப் பள்ளி டிப்ளோமாவைப் பெற்று பாராட்டப்படுவதைக் காட்டுகிறது.
க்ரூக்ஸ் பள்ளி அதிகாரி ஒருவருடன் கருப்பு கண்ணாடி அணிந்தவாறு பட்டமளிப்பு கவுனில் போஸ் கொடுப்பதைக் விழாவின் வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது .
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு க்ரூக்ஸ் எந்த அடையாள அட்டையையும் கொண்டு வரவில்லை என்றும் வேறு வழிகளைப் பயன்படுத்தி அவரை அடையாளம் காண வேண்டும் என சட்ட அமலாக்க அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக FBI சிறப்பு முகவர் கெவின் ரோஜெக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தோமஸ் மேத்யூ க்ரூக்ஸின் வீட்டிற்கு வெளியே டஜன் கணக்கான சட்ட அமலாக்க வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக USA Today தெரிவித்துள்ளது. மதுபானம், புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகத்தின் முகவர்களும் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேக நபரின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக USA Today செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேக நபரின் வீடு மஞ்சள் போலீஸ் டேப்பால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் என்ன செய்தான்? என உலகமே அதிர்ந்து போயுள்ளது.
NYP has ID'ed the Trump shooter as Thomas Matthew Crooks, who graduated from Bethel Park High School in 2022. pic.twitter.com/qqBe3Z3IZ1
— TaraBull (@TaraBull808) July 14, 2024